1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (09:42 IST)

“மதங்களைப் பற்றி பேசுவது சினிமாவுக்கு தேவையில்லை…” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்!

லோக்கல் சரக்கு படத்தின் ஆடியோ விழாவில் பேசிய ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக குற்றம் சாட்டப் பட்டது. இதனையடுத்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கணல் கண்ணன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் லோக்கல் சரக்கு என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் “இப்போது மதத்தைப் பற்றி பேசுவது பேஷன் ஆகிவிட்டது. ஆனால் சினிமாவுக்கு அது தேவையில்லாதது. யாரும் மதங்களை தவறாக சித்தரித்து படம் எடுக்காதீர்கள்.” எனக் கூறியுள்ளார்.