திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (08:15 IST)

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை: கமல்ஹாசன்

kamal
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை என்றும் அது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
 பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்ததிலிருந்து ராஜராஜன் சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்ற பேச்சு பல தலைவர்களால் கூறப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் இது குறித்த கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன
 
இந்த நிலையில் இருந்து இந்து மதம் என்ற பெயர் ராஜராஜன் காலத்தில் இல்லை என்றும் சைவம் வைணவம் சமணம் ஆகிய மதங்கள் தான் இருந்தது என்றும் இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக ஒரு உணர்வு ஏற்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் சினிமா துறையில் மொழி அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் அவர் கூறினார்
 

Edited by Siva