வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (13:08 IST)

அஹிம்சையின் உதாரணம் தான் டிராபிக் ராமசாமி- கமல்

டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தை பார்த்த கமல்ஹாசன் அஹிம்சையின் உதாரணம் டிராபிக் ராமசாமி என்று கூறியுள்ளார்.
 
சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘டிராபிக் ராமசாமி’ என்ற படம் உருவாகியுள்ளது. டிராபிக் ராமசாமி வேடத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விக்கி, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த கமல்ஹாசன் படத்தை பாராட்டி கூறியிருப்பதாவது:- 
 
“ வீரத்தின் உச்சகட்டம்தான் அஹிம்சை, அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி.  அஹிம்சை தான் சிறந்த வீரம் என்று உலகத்திற்கு மகாவீர்ர் காலத்தில் இருந்து உணர்த்திய நாடு தான் இந்தியா. காந்திஜி, அம்பேத்கர், ராஜாஜி உள்ளிட்டவர்கள் வீரத்தால் சாதாரண மனிதர்களாக இருந்து அசாதாரண வீரர்களாக மாறினார்கள்.
 
மகாத்மா காந்தியை பாராளுமன்ற கிணற்றுக்குள் தேடமால் பாத சாரிகளுக்குள் தேடினால் டிராபிக் ராமசாமி போன்றவர்கள் கிடைப்பார்கள். இவரை ஊடகங்கள் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு. ஆனால் டிராஃபிக் ராமசாமி எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார்.
 
எஸ்.ஏ.சி முழு அரசியில் படங்களை அந்தக் காலத்திலேயே இறங்கி எடுத்தவர். அவரே ஒரு இயக்குநராக இருந்தும் விக்கி என்கிற இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.