திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (13:42 IST)

பிக்பாஸ் வீட்டில போய் இருங்க - ஸ்ரீபிரியாவை வம்பிக்கிழுத்த காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் கெட்ட பெயரை வாங்கியவர் காயத்ரி ரகுராம். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னும்  டிவிட்டரில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் தொடர்ந்து பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். 
 
தற்போது இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்துகிறார்.
 
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏராளமான கருத்துகளை தெரிவித்துள்ளார். மேலும், இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இவருக்கு எதிராக கடுமையான கருத்துகளை கூறிய நடிகை ஸ்ரீப்ரியாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

 
தான் புகழடைய வேண்டும் என்பதற்காக சினிமாத்துறையில் உள்ள தனது நண்பர்களை பாட்டி விமர்சனம் செய்திருந்தார். அதுவும், தற்போது நல்லவர் யார் கெட்டவர் யார் என பெயர் வைத்துள்ளனர். அந்த வீட்டினுள் என்ன நடக்கிறது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. இந்த வீட்டிற்குள் சென்று இவர்கள் பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும் என அவர் ஒரு பதிவை இட்டுள்ளார்.
 
இது ஸ்ரீபிரியாவுக்கு மட்டுமல்ல, கமலையும் சேர்த்துதான் காயத்ரி கூறியிருக்கிறார் என டிவிட்டரில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.