வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (07:45 IST)

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடி யார்? வெளியான தகவல்!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் த்ரிஷா, அபிராமி மற்றும் ஐஸ்வர்யா லெஷ்மி என ஏகப்பட்ட ஹீரோயின்கள் இருந்தாலும், கமல்ஹாசனுக்கு ஜோடி கிடையாதாம். அதனால் அவர் வயதான கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தெரிகிறது.