திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (10:21 IST)

மீண்டும் மூன்றாம் பிறை ஃபீலில் ஒரு படம்… கமல் பார்த்து சொன்னது என்ன?

நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே இப்போது படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம். இதனால் அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்‌ஷரா ஹாசனை புக் செய்து படத்தை இயக்கி வருகிறாராம் நவீன்.

படம் முடிந்து சில ஆண்டுகள் ஆனபின்னரும் இன்னும் ரிலீஸ்க்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. படத்தின் டீசர் மட்டுமே கடந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில் இந்த படம் கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் உருவான மூன்றாம் பிறை போன்ற கதையம்சம் கொண்ட ஒரு படம் என சொல்லப்படுகிறது.

இதில் அக்‌ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதால், சமீபத்தில் கமல் இந்த படத்தைப் பார்த்து தன்னுடைய மனக்கருத்தை படக்குழுவினருக்குக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.