இந்தியன் 2 ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 , இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன். இந்தியா கூட்டணியில் அங்கமாக இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த தொகுதிகளும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு ராஜ்ய சபா எம் பி பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஜூன் 7 ஆம் தேதி தனுஷின் ராயன் வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.