வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (09:40 IST)

தக் லைஃப் படத்துக்கு ஒருமணிநேரத்தில் பாடல் எழுதிய கமல்ஹாசன்!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் சென்னையில் செட் அமைகப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.  அடுத்த கட்டமாக முக்கியக் காட்சிகளுக்காக கோவாவுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் படத்தின் பாடலுக்கான ட்யூன் ஒன்றை கமல்ஹாசன் கேட்பதற்காக ஏ ஆர் ரஹ்மான் அனுப்பியுள்ளார். அதைக் கேட்ட கமல்ஹாசன் அதற்கு ஒரு மணிநேரத்தில் பாடல் வரிகளையே எழுதி அனுப்பிவிட்டாராம். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.