1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மே 2024 (07:31 IST)

ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறதா இந்தியன் 2 ரிலீஸ்?... தீயாய்ப் பரவும் தகவல்!

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல பிரச்சனைகளைக் கடந்து இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியன் ஜூன் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் சினிமா வட்டாரத்தில் முதலில் ஜூன் 13 ஆம் தேதி என்றும் பிறகு ஜூன் 27 ஆம் தேதி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவி வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் ஜூலை 17 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருந்த இந்தியன் 2 படத்தின் ஆடியோ ரிலீஸுக்கான பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.