ஆக்ஷனில் குதித்த கமல்
ஆக்ஷனில் குதித்த கமல்
பாபநாசம் படத்துக்குப் பிறகு முப்பதே நாளில் இந்தி படிப்பது போல், முப்பதே நாளில் படங்களை எடுப்பது என்று முடிவு செய்துள்ளார் கமல்.
அவரது தூங்கா வனம் மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்டு, அதைவிட குறைந்த வசூலை ஈட்டியது.
சபாஷ் நாயுடு படத்துக்காக இப்போதுதான் யுஎஸ் போனது போல் இருக்கிறது. அங்கு எடுக்கப்பட வேண்டிய அனைத்துக் காட்சிகளையும் படாக்கிவிட்டதாக கமல் தெரிவித்துள்ளார். சொற்ப சீன்கள் மட்டுமே இந்தியாவில் எடுக்கப்பட வேண்டும்.
இந்த வருட இறுதிக்குள் சபாஷ் நாயுடுவை வெளியிட்டுவிட்டு, முழுநீள ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார். கமலின் கதை, திரைக்கதையை அவரது உதவி இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா படமாக்குகிறார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்