1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 மே 2019 (19:54 IST)

கமல்ஹாசனின் 'தேவர் மகன் 2' புதிய தகவல்கள்!

இந்தியன் 2' திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டாலும் மீண்டும் சினிமாவில் பிசியாக முடிவு செய்துவிட்டார் கமல்ஹாசன் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்திற்கு பதிலாக 'தேவன் மகன் 2' படத்தை தொடங்க கமல்ஹாசன் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
'தேவர் மகன் 2' படத்தை கமல்ஹாசனே தயாரித்து இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் சூர்யா, விக்ரம் , விஜய்சேதுபதி ஆகிய மூவரில் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்களாம். பிக்பாஸ் 3 முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
 
மேலும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தது 5% ஓட்டு பெறவில்லை என்றால் அரசியலில் நீடிக்கவும் கமல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் 10% வரை ஓட்டு வாங்கினால் அரசியல், சினிமா என இரண்டு குதிரைகளிலும் ஒரே நேரத்தில் அவர் சவாரி செய்வார் என்று கூறப்படுகிறது
 
மேலும் சபாஷ் நாயுடு, மருதநாயகம் ஆகிய இரு படங்களையும் விரைவில் தூசு தட்ட கமல் முடிவு செய்திருப்பதாகவும் அடுத்த ஆண்டு முதல் கமல் படங்கள் வரிசையாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது