1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2017 (18:41 IST)

சினிமாவை விட்டு விலகி விடுவேன் - கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

சினிமா துறை மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிடில் சினிமாவை விட்டு செல்வதை தவிர வேறு வழியில்லை என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழ் சினிமாவை பொறுத்தவரை படத்தின் தலைப்பிற்கு தமிழில் பெயர் வைப்பதோடு, தணிக்கை குழுவினரின் யூ சான்றிதழையும் பெற்றுவிட்டால் படத்திற்கு கேளிக்கை வரி கிடையாது என்பதுதான் தற்போதைய  நடைமுறை. 
 
ஆனால், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்டி வரி விதிப்ப்படி, ஜூலை 10 முதல், சினிமாவில் எந்த மொழியில் தலைப்பு வைத்தாலும் ரூ. 28 சதவீத  வரி விதிக்கப்படும். அதாவது, இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து சினிமாவிற்கும் அந்த வரி பொருந்தும். இது திரைப்பட உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது திரும்பப்பெறப்பட வேண்டும் என சினிமா துறையினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்
 
இந்நிலையில், இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் “ சினிமா துறை மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் சினிமா விட்டு சென்று விடுவேன்” என வேதனையுடன் கூறினார்.
 
முன்பு, விஸ்வரூபம் பட வெளியீட்டில் பிரச்சனை வந்த போது, நாட்டை விட்டு சென்று விடுவேன் என கமல்ஹாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.