பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்: கமல்ஹாசனின் கிண்டல் டுவீட்
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெங்காய விலை திடீரென ஏற்றம் கண்டுள்ளது என்பதும் இதனால் விவசாயிகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும் வெங்காயத்தை வாங்கும் பொதுமக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே
வெங்காயம் மட்டுமே கிலோ 100 ரூபாய்க்கு விற்றால் எப்படி சமையல் செய்வது என தாய்மார்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்காய விலை உயர்வுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ஒரு டுவிட்டை கிண்டலாக பதிவு செய்து உள்ளார் அவர் பதிவு செய்துள்ள ட்விட்டரில் இதோ:
பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.
விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார்.
விலையிறங்குவாயா வெங்காயமே?