திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (10:30 IST)

நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்! ரஜினியை வாழ்த்திய கமல்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


 
ரஜினிகாந்த், தனது 69-வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ளார். அரசியலுக்கு வருவேன் என்று அவர் தெரிவித்த பின், கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் இதுவாகும்.
 
இதனையடுத்து அவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
அதில் "என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்" என தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கமல் தனது நெருங்கிய நண்பர் என்று ரஜினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.