ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (23:30 IST)

தடங்கல் மேல் தடங்கல்! என்ன ஆச்சு கமலின் சபாஷ் நாயுடுவுக்கு?

உலக நாயகன் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு' படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ, இந்த படத்திற்கு தடங்கல் மேல் தடங்கல் வந்து காலதாமதம் ஆகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு 'உத்தம வில்லன்', பாபநாசன்' தூங்காவனம் என மூன்று படங்களை வெளியிட முடிந்த கமல்ஹாசனால் 2016ஆம் ஆண்டு ஒரு படத்தை கூட வெளியிட முடியவில்லை.



 


சபாஷ் நாயுடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கிய ஒருசில நாட்களில் இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ் குமார் திடீரென உடல்நலம் குன்றியதால் கமல்ஹாசனே இயக்குனர் பொறுப்பையும் ஏற்றார். பின்னர் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருந்த அதே நாளில் தமிழக சட்டமன்ற தேர்தல் நாள் என்பதால் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பை ஒத்தி வைத்தார்.

பின்னர் ஒரு வழியாக படபிடிப்பை தொடங்க நாள் குறித்த நிலையில் எதிர்பாராதவிதமாக மாடிப்படியில் இருந்து கீழே விழுந்த கமலுக்கு கால்முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் பூரண குணம் அடைந்துவிட்டாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக இருக்கும் ஸ்ருதிஹாசனின் தேதிகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் தேதிக்காக காத்திருப்பதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடரும் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.