வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (22:56 IST)

தன்னைப் போன்று ஆடிய கலைஞரை பாராட்டிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் கிளாசிக் படம் அபூர்வ சகோதர்கள். இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளியாகவும், ஒரு மெக்கானிக்காகவும் நடித்து தூள் கிளப்பியிருப்பார்.

அப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் அண்ணாத்தே ஆடுகிறார் பாடலில் கமலின் அட்டகாசமகா ஆடியிருப்பார்.

இந்நிலையில், அஷ்வின் குமார் என்பவர் கமல் ஆடிய அதே பாடலுக்கு அதே போன்று நடன அசைவுகளை செய்து, ட்ரெட்மில்லரில் ஆடி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து,  கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! என்று அஷ்வினை  பாராட்டியுள்ளார்