1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (22:01 IST)

களத்துல இறங்கிவிடுவோமா கமல்? ஆத்திரத்தில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வருவது குறித்து முடிவு செய்யவில்லை. ஆனால் ஜூலியை ஆர்த்தி சீண்டுவது போல ரஜினியை லெட்டர்பேடு அரசியல்வாதிகள் சீண்டிக்கொண்டே இருக்கின்றனர். அதிகபட்சமாக சுப்பிரமணியம் சுவாமி ரஜினியை ஒருமையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
இதனால் அரசியல் களத்தில் இறங்கலாமா? வேண்டாமா? என்று தயங்கி கொண்டிருந்த ரஜினி, இந்த அரசியல்வாதிகளை ஒருகை பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
 
ஏற்கனவே கமல்ஹாசனையும் சுப்பிரமணியன் சுவாமி சீண்டி வருவதால் கமல், ரஜினி இருவரும் தொலைபேசியில் ரகசிய பேச்சுவார்த்தை செய்து வருவதாகவும், இருவரும் இணைந்து அரசியலில் குதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கூட்டணியில் அஜித், விஜய் இணையவும் வாய்ப்பு உள்ளதாம். கோலிவுட் திரையுலகின் நான்கு பெரிய நடிகர்கள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் மண்ணைக்கவ்வும் என்பதே யதார்த்தமானது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.