வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 14 டிசம்பர் 2016 (16:32 IST)

உயிர்பெறுமா மருதநாயகம்? லைக்கா அதிபர்-கமல் சந்திப்பு!

மருதநாயகம் படத்துக்காக லைக்கா அதிபர் சுபாஷ் கரணுடன் கமல் சந்திப்பு நடத்தினார் என தகவல் வெளியாகியுள்ளது.


 
 
1997-ஆம் ஆண்டு கமல்ஹாசனின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் ஆரம்பமான படம் மருதநாயகம். இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு ராணி எலிசபத்தை வரவழைத்து பிரம்மாண்டமான முறையில் கமல் நடத்தியிருந்தார். 
 
அதிக பொருட்செலவு மற்றும் இந்தியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை உள்ளிட்டவை காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நின்று போனது.
 
தொடர்ந்து அவ்வபோது மருதநாயகம் படம் மீண்டும் துவக்கப்படுவதைப் பற்றி கமல்ஹாசன் பேசி வருகிறார். சமிபத்தில், "லண்டனில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஒரு திரைப்பட தயாரிப்பாளர். அவர் மருதநாயகத்தை தயாரிக்க தயாராக இருக்கிறார். படத்தை எப்போது துவங்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்போது என்னை அழையுங்கள்" என்று கூறியதாக கமல் தெரிவித்தார்.
 
இந்நிலையில், கமல் மற்றும் லைக்கா அதிபர் சுபாஷ் கரண் இருவரும் சமீபத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இச்சந்திப்பில் 'மருதநாயகம்' படத்தின் பொருட்செலவு மற்றும் படப்பிடிப்பு நாட்கள் ஆகியவரை குறித்துப் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.