கமலின் டி.வி. ஷூட்டிங் இங்கதான் நடக்கப் போகுது…
விஜய் டி.வி.யில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி உறுதியாகிவிட்டது. இதன் ஷூட்டிங்கிற்காக, ஆடம்பரமான பங்களா ஒன்றைத் தேர்வு செய்துள்ளனர்.
வட இந்தியாவில் பிரபலமான டி.வி. நிகழ்ச்சி, ‘பிக் பாஸ்’. அமிதாப் பச்சன், சஞ்சய் தத் போன்ற பாலிவுட் ஸ்டார்கள் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை, தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை தமிழில் நடத்த விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார். இந்த நிகழ்ச்சியைத் தமிழில் பண்ணலாம் என முடிவு செய்தபோது, தயாரிப்பாளர் மனதில் முதலில் வந்தவர் கமல் தானாம். அவரும் ஓகே சொல்ல, இதோ ஷூட்டிங் போகப் போகிறார்கள்.
ஆனால், ஷூட்டிங் இங்கல்ல. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லோனவ்லா என்ற இடத்தில். மும்பையில் இருந்து சுமார் 96 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த இடம், மலைப்பாங்கான பிரதேசம். இங்குள்ள ஆடம்பர பங்களா ஒன்றில்தான் ஷூட்டிங் நடக்கப் போகிறது என்கிறார்கள்.