வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (08:52 IST)

23 மணி நேரத்திற்குள் ஒரு படத்தின் மொத்த ஷூட்டிங்கை முடித்த ’கலைஞர் நகர்’ படக்குழு!

தமிழ் சினிமாவில் இதுவரை குறுகிய காலத்துக்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்த படம் என்ற சாதனையை சுயம்வரம் திரைப்படம் தன்வசம் வைத்துள்ளது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், வெவ்வேறு நட்சத்திரங்கள் வெவ்வேறு இடங்களில் ஷூட்டிங் செய்ததால் அது சாத்தியமானது.

ஆனால் இப்போது ஒரே இயக்குனர் கலைஞர் நகர் என்ற படத்தை 23 மணிநேரத்துக்குள் இயக்கி முடித்துள்ளார். இயக்குனர் சுகன் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் ‘மேடை நாடகக் கலைஞர்களை’ மையப்படுத்திய கதையாக உருவாகியுள்ளது.

படத்துக்காக 5 கேமராக்களை பயன்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். முதல் நாள் மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு அடுத்த நாள் மதியம் 1.23 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் 3 பாடல்கள் மற்றும் 2 சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.