செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2017 (14:19 IST)

10 வருடங்களில் 50 படங்கள் – காஜல் அகர்வால் சாதனை

சினிமாவுக்கு வந்த 10 வருடங்களில், 50 படங்களில் நடித்து முடித்துவிட்டார் காஜல் அகர்வால்.


 

2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லட்சுமி கல்யாணம்’ மூலம் சினிமாவுக்கு வந்தவர் காஜல் அகர்வால். பரத் ஜோடியாக நடித்த ‘பழனி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். கடந்த 10 வருடங்களாக தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அஜித்துடன் ‘விவேகம்’, விஜய்யுடன் ‘விஜய் 61’ என ஒரே நேரத்தில் தமிழ்நாட்டின் இரண்டு மாஸ் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். மூன்று மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள காஜல், நேற்று தன்னுடைய 31வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 10 வருடங்களாக நடித்துவரும் காஜல், தன்னுடைய 50வது படத்தைத் தொட்டுள்ளார். தெலுங்கில் ராணா ஜோடியாக நடித்துவரும் ‘நேனே ராஜா நேனே மந்திரி’, காஜலுக்கு 50வது படம்.