வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : வியாழன், 6 ஜூலை 2017 (21:03 IST)

அழகுக்காக ஆபரேஷன் செய்து கொண்டாரா காஜல் அகர்வால்?

அழகாகத் தெரிவதற்காக ஆபரேஷன் செய்து கொண்டார் காஜல் அகர்வால் என்ற தகவல் உலா வருகிறது.


 

 
விஜய்யுடன் ‘மெர்சல்’, அஜித்துடன் ‘விவேகம்’ என ஒரே நேரத்தில் தமிழின் இரண்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னன்களுடன் நடித்து வருகிறார் காஜல். இங்கு மட்டுமல்ல, தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.
 
அவர் சினிமாவில் நடிக்கவந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அறிமுகமானபோது என்ன அழகுடன் இருந்தாரோ, அதே அழகுடன் தான் இப்போதும் திகழ்கிறார். இதனால், அவர் தோல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என தகவல் வெளியானது.

ஆனால், அதை மறுத்துள்ளார் காஜல். “உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வது எப்படி என்பது எனக்குத் தெரியும். முறையான உடற்பயிற்சி, டயட் தான் என் அழகு நீடிக்க காரணம்” என்று கூறியுள்ளார் காஜல்.