1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (18:09 IST)

ஹீரோக்களுக்கு நிகராக சாதனை படைத்த காஜல் அகர்வால்!

காஜல் அகர்வாலின் குறும்புத்தனமான நடிப்பில் உருவாகி வரும் " பாரிஸ் பாரிஸ் " டீசர் சமீபத்தில் வெளியாகியது. இந்த டீஸர் தற்போது 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து அபார சாதனை படைத்துள்ளது.


 
இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'குயின்'. நடிகை கங்கனா ரனாவத், நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும், ஃபிலிம்ஃபேர் விருதையும் கங்கனாவுக்குப் பெற்றுத் தந்தது. 
 
இந்தியில் வெளியாகி 4 ஆண்டுகளைக் கடந்த இப்படம் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் இயக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழில் 'பாரீஸ் பாரீஸ்' என்ற டைட்டிலில் காஜல் அகர்வால்,  'தட் இஸ் மகாலட்சுமி' என தமன்னா தெலுங்கிலும், 'ஜாம் ஜாம்' என மஞ்சிமா மோகன் மலையாளத்திலும், 'பட்டர் ஃப்ளை' என்ற டைட்டிலில் பாருல் யாதவ் கன்னடத்திலும் நடிக்கிறார்கள். இதனை நான்கு மொழிகளிலும் ‘மீடியன்ட் நிறுவனம்' சார்பில் மனு குமரன் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
 
இந்நிலையில் இவற்றின் டீசர்கள் தற்போது வரை 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.