திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (12:49 IST)

ஒருத்தி போலீஸ்காரி, இன்னொரு சினிமாக்காரி: ‘கோஸ்டி’ டீசர்

ghosty
ஒருத்தி போலீஸ்காரி, இன்னொரு சினிமாக்காரி: ‘கோஸ்டி’ டீசர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் நடித்த ‘கோஸ்டி’ என்ற படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
கல்யாண் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே பிரபுதேவ நடித்த குலேபகாவலி உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தில் காஜல் அகர்வால் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். போலீஸ் மற்றும் சினிமா நடிகை ஆகிய இரண்டு கேரக்டரில் நடித்துள்ள காஜல் அகர்வால் செய்த ஒரு சிறு தவறு காரணமாக பேய் ஒன்று அனைவரையும் ஆட்டி வைக்கிறது. அதிலிருந்து காஜல்அகர்வால் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. 
 
முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. சாம் சிஎஸ்  இசையில் உருவாகி என்ற திரைப்படத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, கேஎஸ் ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், ஊர்வசி, ராதிகா சத்யன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் மேனன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
Edited by Mahendran