நின்று விளையாடும் கைதி…. பிகிலைத் தூக்கும் தியேட்டர்கள் !

Last Modified சனி, 9 நவம்பர் 2019 (08:20 IST)
தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் கைதி இன்னமும் தியேட்டர்களில் கூட்டத்தை ஈர்த்து வருகிறது.

தீபாவளியை பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு முன்னனிக் கதாநாயகர்களின் படங்கள் திரைப்படங்கள் வெளியாகின. விஜய்யின் படம் என்பதால் பிகிலுக்கே அனைத்துத் திரையரங்கங்களும் முன்னுரிமைக் கொடுத்தன. அதனால் முக்கியமான தியேட்டர்கள் அனைத்தும் பிகிலுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் கைதிக்கு திரையரங்கள் ஒதுக்கப்பட்டன.

இதனால் கைதி படம் 250 தியேட்டர்களில் மட்டுமே வெளியானது. முதலிரண்டு நாட்களில் பிகில் படம்  பெருவாரியாக கொண்டாடப்பட்டாலும் அதன் பிறகு அதன் கூட்டம் குறைய ஆரம்பித்தது. அதற்கு பிகில் படத்தில் வலுவான கதை இல்லாததே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் வலுவான கதையம்சம் கொண்ட கைதி படத்துக்கு ஒரு வாரத்துக்குப் பிறகே கூட்டம் கூட ஆரம்பித்தது. இத்தனைக்கும் அந்த படத்தில் கதாநாயகி, பாடல்கள் போன்ற கமர்சியல் விஷயங்கள் இல்லை. வலுவான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்தியது.

இந்நிலையில் மூன்றாவது வாரத்தில் தற்போது கைதி 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்க, பிகில் படமோ நிறைய திரையரங்கங்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது.இதில் மேலும் படிக்கவும் :