திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (08:25 IST)

25 வருஷம் ஆகிடுச்சா… காதல் மன்னன் பட இசையமைப்பாளர் பரத்வாஜ் நெகிழ்ச்சி ட்வீட்!

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஆட்டோகிராஃப், வசூல் ராஜா, ஜெமினி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். பரத்வாஜ் ஏராளமான ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அஜித் மற்றும் சரண் படங்களில் அவரின் இசை பிரதானமாக பேசப்பட்டது. குறிப்பாக காதல் மன்னன், அமர்க்களம் ஆகிய படங்களின் வெற்றிக்கு அந்த படத்தின் இசை முக்கியக் காரணம் என சொல்லலாம்.

இந்நிலையில் இந்த கூட்டணியின் முதல் படமான காதல் மன்னன் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளதை அடுத்து சமீபத்தில் ரசிகர்கள் அந்த படத்தைப் பற்றி சமூகவலைதளங்களில் எழுதிக் கொண்டாடினர். இந்நிலையில் இந்த பதிவுகளால் நெகிழ்ந்துள்ள இசையமைப்பாளர் பரத்வாஜ் “காதல் மன்னன் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. என்னுடைய முதல் படம் அஜித்துக்கும், சரணுக்கும்.  காதல்மன்னன் 25-ஐக் கொண்டாடும் அனைத்து தல ரசிகர்களுக்கும் நன்றி.” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.