உலக சுற்றுலாவை தள்ளி வைக்கும் அஜித்? ஹேப்பி ஆன மகிழ் திருமேனி!
அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு அஜித் தன்னுடைய ஒன்றரை ஆண்டுகால உலக சுற்றுலாவை தொடங்க உள்ளதாக திட்டமிட்டு இருந்தார். அதனால் இந்த படத்தை அவசர அவசரமாக தொடங்க வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் இப்போது அஜித் தனது சுற்றுப்பயணத்தை சில மாதங்கள் தள்ளிவைத்துக் கொள்வதாலும் படத்தின் வேலைகளை நிதானமாக செய்யுங்கள் எனவும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இப்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அருண் விஜய், அஜித்தோடு என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அருள்நிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.