காதல் திருமணம் செய்த காதல் பட நடிகர் கரட்டாண்டி!
கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் காதல். பாலாஜி சக்திவேல் இயக்கிய இப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் கரட்டாண்டி எனற கேரக்டரில் வேலை பார்த்த சின்ன பையன் அருண் பலரது மனதிலும் இடம் பிடித்தார். அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் அவர் கவனிக்கப்படவிலை. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்தை காதல் பட சுகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.