1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2017 (17:25 IST)

கபாலி மற்றும் புலிமுருகன் வசூலை முறியடித்த தி கிரேட் ஃபாதர்!

மலையாள படமான தி கிரேட் ஃபாதர் மம்மூட்டி, ஆர்யா, சினேகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று ரிலீஸானது. படத்தை ஹனீப் இயக்கியிருந்தார். இதில் நடிகர் ப்ரித்விராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி  நடேசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

 
கேரளாவில் மட்டும் 202 தியேட்டர்களில் ரிலீஸான தி கிரேட் ஃபாதர் நேற்று மட்டும் ரூ. 4.31 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் கேரளாவில் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது இத்திரைப்படம்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கேரளாவில் ரூ. 4.20 கோடியும், மோகன்லால் நடிப்பில் புலிமுருகன் படம் கூட கேரளாவில் ரிலீஸான அன்று ரூ. 4.05 கோடி தான் வசூலித்தது. இதனால் இப்படம் கபாலி மற்றும் புலிமுருகன் ஆகிய  படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதால், தயாரிப்பாளர் ஆர்யா மகிழ்ச்சி அடைந்துள்ளார். நடிகை சினேகா ஹீரோயின் கதாபாத்திரம் தான் வேண்டும் என அடம்பிடித்த நேரத்தில் தி கிரேட் ஃபாதர் பட வாய்ப்பு  கிடைத்தது.