காற்று வெளியிடை என்ன மாதிரியான படம்...?

Sasikala| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (17:28 IST)
காஷ்மீரில் படப்பிடிப்பு, நாயகன் ராணுவ பைலட், படத்தை இயக்குவது மணிரத்னம்... எந்த கலைடாஸ்கோப்பில் போட்டாலும்  இந்த மூன்று விஷயங்கள் நமக்கு நினைவுக்கு கொண்டு வருவது ரோஜா, உயிரே போன்ற ஒரு படத்தைதான். ஆனால், அப்படியில்லையாம்.

 
காற்று வெளியிடை படத்தில் ஆக்ஷனே இல்லை, முழுக்க காதல்தான் என்று காதை கடிக்கிறார்கள்.
 
ராணுவ பைலட்டாக கார்த்தி இருக்கிறார். அங்கேயே மருத்துவராக பணிபுரிகிறவர் அதிதி ராவ். இவர்களின் காதலுக்கு ராணு  கட்டுப்பாடே தடையாக இருக்கிறது. அதைத்தான் படத்தில் மணிரத்னம் காட்டியிருக்கிறார் என்கிறார்கள்.
 
காதலோ, அடிதடியோ... பார்க்க காத்திருக்கோம்.


இதில் மேலும் படிக்கவும் :