1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : புதன், 15 மார்ச் 2017 (14:45 IST)

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி  அதிதிராவ் ஹைதி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சரியான ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி இருந்தது.


 


தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனுஷின் பவர்பாண்டி, ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' மற்றும் ஆர்யாவின் கடம்பன் என மூன்று முக்கிய படங்கள் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளதால் 'காற்று வெளியிடை' படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ஒரு வாரம் முன்பே அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும்  இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.