செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (19:29 IST)

இரவு பார்ட்டியில் கட்டியணைத்து முத்தமிட்ட சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சமந்தா கணவர் வீட்டில் சண்டைப்போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. காரணம் குழந்தை பெற்றுக்கொள்ளமால் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது தானாம். இந்நிலையில் சமந்தா நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.