செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வெள்ளி, 23 மார்ச் 2018 (22:16 IST)

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா டகுபதி, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், பாகுபலி 2 படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உலக அளவில் சினிமா ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
 
இந்நிலையில் ராஜமௌலியின் அடுத்த படம் குறித்த அதிகாரத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜீனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடிப்பில் ராஜமௌலி இப்படத்தை இயக்க உள்ளார். டிவிவி எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
நடிகர்கள் மற்றும் இயக்குனரின் பெயர்கள் R இல் ஆரம்பிப்பதால் இப்போதைக்கு இப்படம் RRR என சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. மேலும் படம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.