1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (16:52 IST)

காலா, மெர்சல் படப்பிடிப்புகள் ரத்து..

தமிழ் சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் காரணமாக சில படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


 

 
திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பெப்சி அமைப்பிற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து, ஒரு தரப்பும் மாறி மாறி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், தாங்கள் கேட்ட ஊதிய உயர்வை அளிக்காவிடில், இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார். 
 
அதேபோல், பெப்சி சாராத தொழிலாளர்களை வைத்து நாங்கள் படபிடிப்பை நடத்துவோம் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், ரஜினி நடித்து வரும் காலா, மற்றும் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆர்.கே.செல்வமணி இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
பெப்சி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.