செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 மே 2021 (14:14 IST)

கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கேஜிஎப் பட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி,ஆர் தனது அடுத்த படத்தை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பிரபல ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரு பிரபல ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை தொடர்ந்து மற்றுமொறு பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். கேஜிஎஃப் படத்தை இயக்கிய கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது கேஜிஎஃப் 2ம் பாகத்தை தொடர்ந்து பிரபாஸ் உடனான சலார் படத்தில் பிஸியாக உள்ள பிரசாந்த் நீல் அந்த பணி முடிந்ததும் ஜூனியர் என்.டி,ஆர் படத்தை தொடங்குவார் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.