வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (13:22 IST)

எல்லா ஸ்டார்களும் சேர்ந்து படம் நடிப்போம்! – ஜூனியர் என்.டி.ஆர் நம்பிக்கை!

வெவ்வேறு மொழி சினிமாக்கள் என்ற நிலை மாறி இந்திய சினிமா என்ற நிலை உருவாகி வருவதாக ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடித்து உருவாகியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படவிழாவில் பேசிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் “விஜய் நடித்த மாஸ்டர், தனுஷின் படங்கள் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மொழி என்ற தடையை உடைத்து இந்திய சினிமா என்ற நிலை உருவாகி வருகிறது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் என்றாவது ஒருநாள் ஸ்டார் நடிகர்கள் பலர் இணைந்து நடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.