வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2025 (08:44 IST)

கேம்சேஞ்சர் படத்தில் நடித்து துணை நடிகர்கள் போலீஸீல் புகார்… பின்னணி என்ன?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், தில் ராஜூ தயாரித்த ‘கேம்சேஞ்சர்’ திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எழுந்த எதிரமறையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த படத்தின் பட்ஜெட்டில் 50 சதவீத வசூலைக் கூட படம் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த துணை நடிகர்கள் 350 பேர் குண்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளனர். அதில் ‘இந்த படத்தின் இணை இயக்குனர் ஸ்வர்கன் சிவா என்பவர் படத்தில் நடிக்க அழைத்து அனைவருக்கும் தலா 1200 ரூபாய் சம்பளமாகப் பேசினார். ஆனால் படம் ரிலீஸான பின்னரும் எங்களுக்கு இன்னும் சம்பளம் தராமல் ஸ்வர்கன் சிவா ஏமாற்றி வருகிறார்’ எனக் கூறியுள்ளனர்.