1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (07:39 IST)

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 91வது படம்: ஹீரோ யார் தெரியுமா?

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 91வது படம்
தளபதி விஜய் உள்பட பல முன்னணி ஹீரோக்களை வைத்து தயாரித்த திரைப்பட நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் என்பது தெரிந்ததே. கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் தயாரிக்காமல் இருந்த சூப்பர் குட் நிறுவனம் தற்போது ஒரு புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது 
 
இந்த படம் இந்நிறுவனத்தின் 91வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சசியின் உதவியாளர் சந்தோஷ்ராஜன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் கூறிய கதையை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி அவர்களை கவர்ந்ததால் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் ஆர்பி சவுத்ரி மகன் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே தனது சொந்த நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பல திரைப்படங்களில் ஜீவா நடித்துள்ளார் என்பதும், மீண்டும் தனது சொந்த நிறுவனத்திற்காக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படம் என்ற்ம், தமிழில் இது ஒரு வித்தியாசமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நேற்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது என்பதும் படப்பிடிப்பும் நேற்று முதல் தொடங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது