1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (07:31 IST)

இது ரி ரிலீஸ் காலம்… ஜீவாவின் ‘கோ’ திரைப்படமும் கோதாவில் இறங்கியது!

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை மார்க்கெட்டில் இருந்தவர் நடிகர் ஜீவா. அவர் நடித்த கோ, நண்பன்,ஈ உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் அந்த வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அவர் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யவில்லை. இதனால் தோல்விப் படங்களாகக் கொடுத்து இப்போது தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார்.

அவர் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய திரைப்படம் என்றால் அது கே வி ஆனந்த் இயக்கத்தில் ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் தயாரிப்பில் அவர் நடித்த கோ திரைப்படம்தான். 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் பழைய ஹிட் படங்கள் ரி ரிலீஸ் ஆகும் ட்ரண்ட்டில் கோ திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த படத்தை மார்ச் 1 ஆம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்துள்ளார். மொத்தம் 100க்கும்  மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.