1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (20:32 IST)

கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா 2’: மூன்று நிமிட டீசர்

jigarthanda12
கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா 2’: மூன்று நிமிட டீசர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா என்ற திரைப்படம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு இன்று காலை வெளியானது
 
இந்த நிலையில் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய 2 பேரும் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும், இருவரும் இதற்கு மாறுபட்ட கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட 3 நிமிட டீசரில் இருந்து தெரியவந்துள்ளது.
 
இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran