வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (17:36 IST)

கல்யாணம் ஆன பொண்ணுக்கு ஏதாவது ஆனா முதல் குற்றவாளி கணவன் தான்: ‘பிளாக்’ டிரைலர்..!

ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த "பிளாக்" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் சற்று முன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவன்-மனைவியான ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் ஒரு வில்லாக்குச் சுற்றுலா சென்றபோது, அந்த வில்லாவில் அவர்கள் சந்திக்கும் திகில் சம்பவங்களே இந்த படத்தின் கதை என்று ட்ரெய்லரில் தெரிய வருகிறது.

ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைப்பில்,  கோகுல் பினாய் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

"பிளாக்" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப் படமே கிடைக்காத நிலையில், இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva