1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (16:52 IST)

திருஷ்யம் 3 க்ளைமேக்ஸ் எழுதியாச்சு… மோகன் லாலுக்கு பிடிச்சிருக்கு – ஜீத்து ஜோசப் கொடுத்த அப்டேட்!

மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெளியாகி நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த பாகமும் வெற்றி பெற்று தமிழைத் தவிர பிற மொழிகளில் எல்லாம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இதுபற்றி சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் ஜீத்து ஜோசப் “திருஷ்யம் 3 க்கான க்ளைமேக்ஸ் காட்சி என்ன என்பதை முடிவு செய்துவிட்டோம். அது மோகன் லாலுக்கும் பிடித்துள்ளது. இன்னும் இடைபட்ட கதையை மட்டும் உருவாக்க வேண்டும். திருஷ்யம் 1 வந்து  5 ஆண்டுகள் கழித்துதான் திருஷ்யம் 2 வந்தது. அதனால் திருஷ்யம் 3 வர இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் ஆகும்” எனக் கூறியுள்ளார்.