மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி! – 12த் மேன் ஃபர்ஸ் லுக்!

12th man
Prasanth Karthick| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (11:06 IST)
மலையாள சினிமாவின் ஹிட் காம்போவான ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணியின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மிகப்பெரும் ஹிட் அடித்தப்படம் திருஷ்யம். இந்த படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரிலும், இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் திருஷ்யம் என்ற பெயரிலும் ரீமேக் ஆனது. சமீபத்தில் திருஷ்யம் இரண்டாம் பாகமும் ஓடிடி மூலமாக வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில் மீண்டும் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார். 12த் மேன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் த்ரில்லர் வகை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :