53 மரங்கள் தாவிய ஜெயம் ரவி


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 5 மே 2017 (19:12 IST)
வனமகன் படத்திற்காக ஜெயம் ரவி 53 மரங்கள் தாவியதாக அப்படத்தின் இயக்குநர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

 

 
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் வனமகன். இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் விஜய், ஜெயம் ரவி 53 மரங்கள் தாவியதாக கூறினார். 
 
பேராண்மை படத்தை அடுத்து வனமகன் படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடியினராக நடிக்கிறார். ஆனால் இதில் சற்று வித்தியாசமான காட்டுவாசி போல் நடித்துள்ளார். இக்கதை கொண்ட திரைப்படம் ஏற்கனவே ஹாலிவுட்டில் வெளியாகி அனைவரின் பாராட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இதுகுறித்து ஜெயம்ரவி கூறியதாவது:-
 
நான் மரங்கள் தாவியது உண்மைதான். ஆனால் எத்தனை மரம் என்று நினைவில் இல்லை என கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :