வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (08:04 IST)

பரத நாட்டிய பின்னணியில் ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் வெற்றிக்கூட்டணி அமைத்த நடிகர்- இயக்குனர் இணையில் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா கூட்டணிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இவர்கள் கூட்டணியில் உருவான படங்களில் தில்லாலங்கடி தவிர மற்ற அனைத்தும் ஹிட்டாகின. ஆனால் அவற்றில் தனி ஒருவன் தவிர மற்ற அனைத்துமே ரீமேக் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர்களில் சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகியோரின் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாம். அந்த படம் சலங்கை ஒலி பாணியில் பரதநாட்டியத்தை கதைக்களமாக கொண்ட படமாக உருவாகும் என சொல்லப்படுகிறது. ஜெயம் ரவி சிறு வயதிலேயே பரதநாட்டியத்தை முறைப்படி கற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.