நான்கு நாளில் ஜெயம் ரவியின் சைரன் படத்தின் வசூல் இவ்வளவுதானா?
ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்ததி சுரேஷோடு சைரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. இந்நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சமீபகாலமாக ஜெயம் ரவியின் அகிலன் மற்றும் இறைவன் ஆகிய திரைப்படங்கள் மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றன. இந்நிலையில் சைரன் இந்த படங்களை விட முதல் நாள் வசூலில் முந்தியுள்ளதாம். இந்த படம் தமிழகத்தில் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாம்.
ஆனால் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களிலும் வசூலில் பெரிதாக பிக்கப் இல்லை. நேற்று வேலை நாளான திங்கள் கிழமையில் வசூல் ஒரே அடியாக குறைந்துவிட்டதாம். நான்கு நாள்களில் சைரன் திரைப்படம் வெறும் 6 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாம்.