செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (16:32 IST)

அமெரிக்காவில் ஏமாற்றமளித்த ஜேம்ஸ் பாண்ட் பட வசூல்!

அக்டோபர் 8 ஆம் தேதி நோ டைம் டு டை படம் அமெரிக்காவில் வெளியானது.

உலகம் முழுவதும் மிக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று இந்த படத்தின் குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் வியாபாரம் சுமாராக 600 மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அக்டோபர் 8 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியான இந்த படத்தின் வசூல் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கிட்டத்தட்ட 90 மில்லியன் டாலர்களை வார இறுதியில் வசூலிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் 55 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது.