திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (17:22 IST)

இன்னும் தொடங்கவே இல்ல…. அதுக்குள்ளயா? ரஜினியின் ‘ஜெயிலர்’ பட தலைப்புக்கு வந்த சிக்கல்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தற்காலிகமாக “தலைவர் 169” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் ”ஜெயிலர்” என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான  போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது ஜெயிலர் தலைப்புக்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மலையாளத்தில் தற்போது ஜெயிலர் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறதாம். இதனால் ஜெயிலர் படத்தை மலையாளத்தில் என்ன பெயரில் ரிலீஸ் செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.