திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (21:03 IST)

ஜெய்பீம் வெளியாகி 2 ஆண்டு நிறைவு: முதல்வருக்கு நன்றி கூறிய சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர்  நடிப்பில்  டி.ஜே.ஞானவேல்ராஜா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு  வெளியான ஜெய்பீம். இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்திருந்தார். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். சூர்யா, ஜோதிகா இப்படத்தை தயாரித்திருந்தனர்.

இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், விருது கிடைக்கவில்லை. இதுபற்றி சினிமா கலைஞர்கள், சினிமா விமர்சகர்கள் பலரும் கேள்வி  எழுப்பினர்.

இந்த நிலையில், இப்படம் வெளியாகி 2 ஆண்டுகள்  நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து சூர்யா வலைதள பக்கத்தில்,

‘’ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்’’ என்று தெரிவித்துள்ளார்.