8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ஜெய் பீம் டீசர்!
சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெய் பீம் படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியானது.
இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதுமாய் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் முன்னதாகவே அமேசான் ப்ரைம் ஓடிடிக்கு விற்கப்பட்டது.
இதனால் இந்த படம் அமேசானில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் டீசர் வெளியாகியுள்ளது. பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டீசர் இப்போது 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று வெற்றிக்குப் பின் சூர்யா படம் ஒன்று வெளியாவதால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.